பிரபல நடிகரின் பட வாய்ப்பை இழந்த காஜல் அகர்வால்- காரணம் என்ன தெரியுமா?

204

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் . தொடர்ந்தும் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் தீடிர் என கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் இவரது நடிப்பில் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ் ஆகிய தமிழ்ப் படங்கள் வெளிவர உள்ளன. இந்தியன் 2, கருங்காப்பியம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு திருமணத்திற்க்கு பிறகும் நடித்து வருகிறார் .

இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தியால் பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். நாகார்ஜுனா கோஸ்ட் தெலுங்கு படத்திலிருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதில் இப்படத்தில் இலியானா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் குறித்து காஜல் அகர்வால் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.