கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வரும் காஜல் அகர்வால்

2530

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், இவர் தனது இயல்பான நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்கள் பலரைக் கவர்ந்திருப்பதோடு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.

மேலும் இவர் கடந்தாண்டு தனது நீண்ட நாள் காதலனான கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் காஜல், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருவதை அடுத்து நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில்,எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்பொழுது தொடர்ந்து நடிப்பதற்கு புதிய பட வாய்ப்புகள் காஜல் அகர்வாலை வந்துள்ளதாம்.

ஆனால், நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், புதிதாக படங்களில் கமிட்டாவதை தவிர்த்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.மேலும் இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் வெளிப்படையாக கூறினால் மட்டுமே, இது உண்மையா..? இல்லை வெறும் வதந்தியா..? என்று தெரியவரும் என்பதும் அப்படி உண்மையாக இருந்தால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.