தன்னுடைய கணவரை இறுக்கி அணைத்தபடி காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம்

217

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தமிழுக்கு வருவதற்கு முன்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக அறிமுகமானார்.அத்தோடு ஆரம்பத்தில் தமிழில் சுமாரான படங்கள் நடித்தாலும் அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தவர் என்பதும் தெரிந்ததே.

மேலும் அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் வெளியான துப்பாக்கி திரைப்படம் தமிழில் காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அத்தோடு விஜய்யுடன் மட்டுமே துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கிய வெப்சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால். ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற பெயரில் உருவாகியிருந்த அந்த வெப்சீரீஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முதல் திருமணம் ஆகியிருந்தது. அத்தோடு திருமணம் முடித்தவுடன் இவர் தேன்நிலவுக்காக மாலைதீவு சென்றிருந்ததும் தெரிந்ததே. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவரை இறுக்கி அணைத்தபடி காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது எனலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: