பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 தற்போது வெற்றிகரமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.எனினும் தற்போது ஃப்ரீஸ் டாஸ்கில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொரு ஆளாக வீட்டிற்குள் வருகின்றனர். மேலும் அந்த வகையில் கதிரின் காதலியும், மாடல் அழகி செரீனாவும் வந்திருந்தனர். எனினும் இந்த நிலையில் செரீனா கதிரின் விளையாட்டு குறித்தும் ஷிவினுடைய விஷியத்தில் கதிர் நடந்து கொள்ளும் முறை குறித்தும் பேசியிருந்தார்.
அத்தோடு கடந்த ஒரு வாரமாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியேறிய போட்டியாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். ஜிபி முத்து மெட்டிஒலி சாந்தி, மணிகண்டன் மற்றும் தனலட்சிமி போன்றவர்கள் கூட வந்திருந்தனர். மேலும் இதில் கலகலப்பான சில நிகழ்வுகள் நடந்தன. இந்த நிலையில் கதிருடைய அப்பா மற்றும் அம்மா வந்திருந்தனர். மேலும் மாடலான சினேகா ரவி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி கதிரை ஆச்சரியப்படுத்தினார். இந் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் பலர் இதனால் ஆச்சரியமடைந்து இருவருக்கும் இடையிலான உறவைப் பற்றி ஆர்வமாக இருந்தனர்.
இவ்வாறுஇருக்கையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள மாடல் அழகியான செரினா கதிரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஏன் உனக்கு ஒரு காதலி இருக்கிறார் என்று வெளியில் சொல்லவில்லை என்று கேட்டிருந்தார்.அத்தோடு பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டிடயாளர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என்று கூறி கடுமையாக விமர்சித்திருந்தார்.
கதிர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து அவரை பற்றிய சில விஷயங்களை மட்டும்தான் சொல்லி இருக்கிறார். குயின்ஷி, நிவாஷினி போன்றவர்கள் தங்களுக்கு வெளியில் காதலர்கள் இருக்கின்றனர் என்று வெளிப்படையாக கூறிய நிலையில் கதிர் எந்த விஷியத்தையும் கூறாமல் இருந்து வந்தார். இருந்த போதிலும் சமீபத்தில் அவருடைய காதலி சினேகா ரவி வீட்ற்குள் வந்திருந்தார். மேலும் இவரை பற்றியும் எதுவும் சொல்லாமல் இருந்த கதிரை தனக்கு வெளியில் பெண் ரசிகைகள் வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தீர்களா? என்று கேட்டார் ஷெரினா.
இதற்கு மழுப்பிய கதிரிடம் மேலும் ஷிவின் குறித்த விஷயத்தை பற்றி கேட்டார். அத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சினேகா ரவியை தனது சிறந்த தோழி என்று கூறியது தவறு என்றும் இந்த விஷயத்தை நீங்கள் வெளிப்படையாக பெயரை குறிப்பிடாமல் எனக்கு வெளியில் ஒருவர் இருக்கிறார் என்று கூறியிருக்கலாம். அத்தோடு சினேகா வந்த போது ஷிவின் மிகவும் மானவருத்தப்பட்டு அழுததை பார்த்தது தனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று கூறினார் செரீனா.
இதற்கு பதிலளித்த கதிர் ஷிவின் அந்த நோக்கத்தோடு இருந்தார் என்று எனக்கு தெரியாது என்று கூற செரீனா வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண மனிதருக்கே தெரியும் போது உங்களுக்கு தெரியாதது போல நடிக்காதீர்கள்? என்று கதிரை கடுமையாக குற்றம் சாட்டினார் செரீனா. அத்தோடு கதிர் உங்களுக்கு பெண் ரசிகைகள் வேண்டும் என்பதற்க்காகத்தான் இப்படி செய்தீர்களா? என்றும் அப்போது இதனை முழுவதும் பிளான் செய்து வந்துள்ளீர்கள்?. உங்களுடைய விளையாட்டு நன்றாக இருக்கிறது என்று கூறினார் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
As I said earlier,#Kathir continues to lie he didnt understand anything until few days back!During jealousy track with #Queency,he didn't understand anything,ryt?Revealed things during roast? #shivin, wake up, may u not fall for such men!! #biggbosstamil6https://t.co/yAqevvvxYq
Listen News!