• Apr 19 2024

மோகன் ஒரு புரட்சியாளன்... ஓப்பனாக கூறிய கே. ராஜன்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

ப்ரொடியூசர் கே. ராஜன் அவர்கள் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அவர் கூறுகையில், நான் இதே மேடையில் 150 படங்களுக்கு படங்களுக்கு வாழ்த்து சொல்லி இருப்பேன். சின்ன படங்களுக்கு நான் தவறாமல் வந்து வாழ்த்துவேன்.


ஏனென்றால், சின்ன ப்ரொடியூசர் வாழ்ந்தால் தான் சினிமா உலகம் நல்லா இருக்கும். பெரிய ஹீரோக்கள், பெரிய படங்கள் வாழ்ந்தால் அவங்க மட்டும் தான் நல்லா இருப்பார்கள். மோகன் ஜி வெற்றி பெற்றால் அடுத்து இன்னொரு நல்ல படம் எடுப்பான். அவன் ஒரு புரட்சியாளன், சினிமா உலகில் வித்தியாசமானவன். வழக்கமான குடும்ப கதை எடுத்து, பழக்கமான சினிமா கதையை ஓடவைப்பவன் இவன் அல்ல.


திரௌபதி, ருத்ரதாண்டவம் இரண்டுமே தமிழ்நாட்டில் பேசப்பட்டது. வித்தியாசமாக பேசப்பட்டது, அதில் ஒரு புரட்சி கருத்து இருந்தது. அதையடுத்து இந்த படம், இது தமிழ்நாட்டையே புரட்டி போட்டுகொண்டு இருக்கும் விஷத்தை படத்தில் அழகாக கூறியிருக்கிறான்.


எனக்கும் இந்த படத்தில் ஒரு பங்கை தந்திருக்கிறான், அந்த பெண்ணின் தாத்தாவாக நடிக்கவைத்துள்ளான். நான் இதுவரைக்கும் அப்படி நடித்ததே இல்லை, என்னையும் நடிக்க வைத்திருக்கிறான். இரண்டு டேக், மூன்று டேக் என்று நடிப்பை வரவைத்தது நம்ம மோகன் தான்.


அதுமட்டுமல்ல, இந்தியாவின் சிறந்த இயக்குநர் செல்வராகவன், அவரையும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளான். இந்த படம் மிக நல்ல படமாக மக்கள் மத்தியில் பேசப்படும் என்று கூறியிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement