• Apr 26 2024

மம்முட்டி பட ஷுட்டிங்கிற்கு மாஸாக காரில் வந்து இறங்கிய ஜோதிகா- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் ஜோதிகா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த இவர் சூர்யாவைத் திருமணம் செய்திருந்ததை அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 


அந்த வகையில் மலையாளத்தில் உருவாகும் ‘காதல் - தி கோர்’ படத்தில் நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குநர் ஜோ பேபி இப்படத்தை இயக்கி வருகிறார்.


இந்த படத்திற்கு மேத்யூ புலிகன் என்பவர் இசையமைத்து வருகிறார். மம்மூட்டி சொந்த நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகை ஜோதிகா இன்று இணைந்தார். தற்போது படப்பிடிப்பிற்காக நடிகை ஜோதிகா வந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 






Advertisement

Advertisement

Advertisement