“அவரை ஒரு முறை நேரில் பார்த்தாலே போதும்..”: குக் வித் கோமாளி புகழ் கூறிய அந்த நபர் யார் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான குக்வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் புகழ்.

அத்தோடு இவர் வெள்ளித்திரையில் எதற்கும் துணிந்தவன், வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்து அடுத்தகட்டத்திற்கு முன்னேறி இருக்கின்றார்.

பல டாப் ஹீரோ படங்களில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாக நடித்து வரும் புகழ், சோலோ ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் பிலிப்பைன்ஸ் நாட்டில் உண்மையான மிருகங்களுடன் நடந்து இருக்கிறது.

இந்நிலையில் புகழ் அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில் தனக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என கூறியிருக்கிறார்.

அப்படி இல்லை என்றால் ரஜினியை ஒரு முறை நேரில் பார்த்தால் கூட போதும் எனவும் அவர் சொல்லி இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்