• Mar 25 2023

சும்மாதெறிக்குதே!!..வெளியானது MISSION IMPOSSIBLE படத்தின் போஸ்டர்! ரிலீஸ் எப்போ தெரியுமா?

Jo / 1 week ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமெரிக்க நடிகர் டாம் குரூஸ். 1983 ஆம் ஆண்டு வெளியான ’ரிஸ்கி பிசினஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமான இவரை 1986- ஆம் ஆண்டு வெளிவந்த  'டாப் கன்' படம் முன்னணி கதாநாயகனாக மாற்றியது. 'மிஷன்: இம்பாசிபிள்' தொடர் வரிசைப் படங்களின் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் டாம் குரூஸ்க்கு ரசிகர்களாக மாறினர்.

டாம் குரூஸின் சமீபத்திய திரைப்படமான 'டாப் கன்: மேவ்ரிக்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, இந்த வருடம் வெளியாக இருக்கும் ’மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கம் போல மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பாகம் ஒன்றின் படப்பிடிப்பிலும் ஸ்டண்ட் டபுள்ஸைப் பயன்படுத்தாமல்  ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டாம் குரூஸ் நடித்துள்ளார். உயரமான மலையில் இருந்து பைக்கில் பள்ளத்தாக்கில் குதிப்பது போல அமைந்துள்ள காட்சியை படமாக்கும் BTS வீடியோ காட்சிகள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.

"சினிமா வரலாற்றில் மிகவும் நம்பமுடியாத ஸ்டண்ட்" என இந்த வீடியோ காட்சிகள் வரையறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” ,

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. உயரமான மலையில் பைக் ரைடு செய்து மலையில் இருந்து பைக்குடன் பள்ளத்தாக்கில் குதிக்கும் தருணம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.  செப்டம்பர் 2020 இல் நார்வே நாட்டில் மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெக்கனிங் பாகம் ஒன்றின் படப்பிடிப்பில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

2023 ஜூலை மாதம் 14 ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தன் ஹன்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார். முந்தைய ஆறு பாகங்களின் தொடர்ச்சியாக இந்த கதாபாத்திரம் உள்ளது  குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement