• Apr 18 2024

ஜுவா நடிப்பில் உருவான வரலாறு முக்கியம் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் ஜுவா.இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சற்று சறுக்கல்கலையே சந்தித்து வருகின்றது.அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக 'காபி வித் காதல் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படத்தில்  ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, அமிர்தா மற்றும் டிடி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தனர். இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


 இந்நிலையில் தற்போது ஜீவா நடிப்பில் 'வரலாறு முக்கியம்' படம் வெளியாகியுள்ளது.சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, காஷ்மீரா, பிரக்யா, விடிவி கணேஷ், கே. எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தது.எனவே இப்படம் குறித்து வாங்க பார்க்கலாம்.

படத்தின் கதைக்களம்

கோவையில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தந்தை கே.எஸ். ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார் ஜீவா. அதே தெருவில் கேரளாவில் இருந்து அக்கா தங்கை காஷ்மிரா மற்றும் பிரக்யா குடும்பத்துடன் குடி வருகின்றனர். காஷ்மீரின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே கட்டிக் கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார்.


ஜீவா காஷ்மிராவை ஒருதலையாக காதலித்து பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதன்பின்னர் என்ன ஆனது? கடைசியில் இருவரும் இணைந்தார்களா என்பதை கலகலப்புடன் ஜாலியாக சொல்லி இருக்கும் படம் தான் வரலாறு முக்கியம்.

படம் பற்றிய அலசல்

பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் “ஜீவா”வின் தோற்றம் இக்கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. 'சிவா மனசுல சக்தி' படத்திற்கு பிறகு முழு நீள காமெடியில் இந்தப்படத்தில் கலக்கியுள்ளார் ஜீவா. அவருக்கு ஜோடியாக வரும் காஷ்மீராவும் அழகாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்துள்ளார்.

மேலும் கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் தங்களது சீனியர் நடிப்பை படத்திற்கு தேவையான அளவு கொடுத்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வி.டி.வி கணேஷும் காமெடியில் கலக்கியுள்ளார். ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும் காமெடி காட்சிகளால் போர் அடிக்காத பொழுதுபோக்கு படமாக பாஸ் மார்க் வாங்கியுள்ளது.இதனால் இப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement