• Apr 25 2024

ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்த ஜுனியர் என்.டி.ஆர்- கொண்டாடும் ரசிகர்கள்.!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம் சரண் ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர்.சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின், நாட்டு பற்று மற்றும் நடிப்பை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு,  உலக அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், இப்படத்திற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வந்தன.


சமீபத்தில் ஆர் ஆர் ஆர், திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு ' சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை தட்டி தூக்கிய நிலையில், இதற்காக விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இந்த விருது விழாவில் கலந்து கொண்ட ஆர் ஆர் ஆர் பட குழுவினர் ரெட் கார்பெட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.


இதில் நடிகர் ராம்சரண் அணிந்திருந்த தனித்துவமான ஆடை டாப் 10 பட்டியலில் இடம் பிடித்தது.தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து வந்த இத்திரை திரைப்படம்,  6 பிரிவுகளின் கீழ் நாமினேட் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலில் சிறந்த நடிகருக்கான நாமினேஷன் பட்டியலில் ஜூனியர் என் டிஆர் இடம் பெற்றுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பட குழுவும் கொண்டாடி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement