• Jun 04 2023

பல சர்ச்சைகளின் பின்னர் மீண்டும் கம்பேக் கொடுத்த ஜானி டெப்!- தேம்பி தேம்பி அழுத சம்பவம்- நடந்தது என்ன தெரியுமா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


கேப்டன் ஜாக்ஸ்பேரோவாக உலகளவில் ரசிகர்களை ஈர்த்த ஜானி டெப் ஆக்வாமென் பட நடிகையான ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமணம் ஆன சில மாதங்களில் இருந்தே இருவருக்கும் பல பிரச்சனைகளும் சண்டைகளும் வெடித்தன.

ஜானி டெப் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கொடூரமாக தாக்குவதாகவும் ஆம்பர் ஹெர்ட் புகார் அளித்திருந்தார். அவர் தான் தனது கை விரல்கள் வரை வெட்டி விட்டார் என ஜானி டெப் பதிலுக்கு புகார் அளிக்க சில ஆண்டுகள் ஓடிய அந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு ஜானி டெப்புக்கு சாதகமாக வந்தது. 


மீடூ புகார் ஜானி டெப் மீது கிளம்பிய நிலையில், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என அந்த நிறுவனம் ஜானி டெப்பை தூக்கி எறிந்தது. ஆனால், வழக்கின் தீர்ப்பு இவருக்கு சாதகமாக வந்த நிலையில், பல பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில், Jeanne Du Barry படத்தில் நடித்த ஜானி டெப் அந்த படத்தை நேற்று தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன் முறையாக திரையிட்டார்.


 அதில், 'கிங் லூயிஸ் 15'வது மன்னராக ஜானி டெப் நடித்துள்ளார்.கேன்ஸ் திரைப்பட விழாவில் அந்த படத்தை பார்த்த பல பிரபலங்களும் எழுந்து நின்று அதிகபட்சமாக 7 நிமிடங்கள் கைதட்டி ஜானி டெப்பின் கம்பேக்கை வெகுவாக கொண்டாடினர். அந்த சந்தோஷ தருணத்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ஜானி டெப் கண்கலங்கி அழுத காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இந்த படத்தைத் தொடர்ந்து மோடி என்கிற டைட்டிலில் ஜானி டெப் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement