சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சீரியலின் கதைப்படி அதில் ஜீவானந்தத்தின் வீட்டைத் தேடி அடியாட்களுடன் கதிர் செல்கின்றார். மறுபுறம் ஜனனியும் செல்கின்றார். அப்போது ஜீவானந்தம் தன்னுடைய குழந்தையுடன் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.
மறுபுறம் அப்பத்தா கண்முழித்து விட்டதால் குணசேகரன் சொத்தை தன்னிடம் எழுத்தித் தரச்சொல்லி அப்பத்தாவிடம் அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் அடியாட்களுடன் சென்ற கதிர் துப்பாக்கியால் சுட்டு விடுகின்றார்.
இதனால் ஜீவானந்தத்தின் மனைவி இறந்து விடுகின்றார். இதைப் பார்த்த ஜனனியும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றார். மனைவி இறந்ததால் ஜீவானந்தம் குணசேகரனை சும்மா விட்டிடுவாரா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!