• Sep 26 2023

வளவன் மேல் கடுப்பான கதிர்... மன்னிப்புக் கேட்ட ஜனனி... குணசேகரனை போட்டுத்தள்ளத் துடிக்கும் ஜீவானந்தம்.. பரபரப்பான 'Ethirneechal' Episode..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம். அதில் ஜீவானந்தத்தினுடைய மனைவி கயல்விழி துப்பாக்கி சூடு பட்டு இறந்து கிடக்கின்றார். இதனால் கணவன், மகள் இருவரும் கண்ணீர் வடிக்கின்றனர். இதனைப் பார்த்த ஜனனி அதிர்ச்சியில் இருக்கின்றார்.


பின்னர் யாராவது பார்த்தால் பிரச்சினை ஆகிவிடும் என்பதற்காக கதிரை வளவனும் அவரது கும்பலும் இணைந்து இழுத்து செல்கின்றனர். இதனால் கடுப்பான கதிர் "முதல் நாளில் இருந்தே எனக்கு உன் மேல பயங்கர சந்தேகம் இருக்கு, அல்வா மாதிரி கிடைச்சவன ஒழுங்கா பார்த்து சுட தெரியல. நீ எல்லாம் ஒரு போலீஸ்காரனா?" எனக்கூறி கண்டபாட்டிற்கு வளவனை திட்டுகின்றார். 


மறுபுறம் ஜீவானந்தம் தன்னுடைய மனைவிக்கு வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்து அவரின் உடலிற்குத் தீ வைக்கின்றார். மனைவியின் நினைவுகள் கண் முன் வந்து போவதால் மறக்க முடியாமல் கண் கலங்கி இறுக்கினார். இதனைப் பார்த்த ஜனனி, சத்தியமா உங்களை இப்படி ஒரு நிலைமையில பார்ப்பேன் என நான் கொஞ்சம் கூடி நினைக்கலை. நான் ஏதோ நினச்சு வந்தேன் ஆனா இங்க என்னென்னமோ நடந்துடுச்சு" எனக் கூறி ஜீவானந்தத்திடம் சாரி கேட்கின்றார். 


அதுமட்டுமல்லாது "உங்களுக்கும் நம்ம அப்பத்தாவுக்கும் இருக்கும் உறவு பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. ஆன நீங்க தப்பானவர் இல்ல என்பது மட்டும் எனக்கு இப்ப புரியுது. நாங்க தான் உங்கள தப்பா புரிஞ்சுக்கிட்டோம்,  அன்னிக்கு ஆபிஸ்ல நீங்க நடந்துக்கிட்டதுக்கும் இப்போ நான் பார்த்ததுக்கும் நிறைய வித்தியாசம்" என்கிறார்.


மேலும் "உங்களுக்கு இப்படி ஒரு அழகான குடும்பம் இருக்கும் என நான் நினைக்கல. நீங்க இவர்களுக்காக இருந்து இருக்கலாமே. எதுக்காக உங்களுக்கு இந்த போராட்டம்" எனவும் ஜனனி ஜீவானந்தத்திடம் கேட்கின்றார். பதிலுக்கு ஜீவானந்தம் நான் யாருக்கும் எதையும் புரிய வைக்க விரும்பவில்லை. வார்த்தைகளால்  எல்லாத்தையும் புரிய வைக்க முடியாது. நீ நல்ல பொண்ணு உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும். யாருக்கும் நான் பயப்படவும் மாட்டேன், கட்டுப்படவும் மாட்டேன் என கூறுகின்றார்.

இதனையடுத்து தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஜனனியிடம் சொல்கிறார் ஜீவானந்தம். அப்போது என் மகளையும், மனைவியையும் பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்பதற்காக தான் இங்கே தனியாக வைத்து இருந்தேன். எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்" என்றார்.

மேலும் "என் எதிரிகள் யாரும் இதுவரையில் என்னுடைய குடும்பம் மீது இப்படி கை வைத்து இல்லை. இது யாரோ புது எதிரி. அவர்களை நான் சும்மா விடமாட்டேன். ஏவி விட்டவன நான் விடமாட்டேன்" எனவும் கோபத்தில் கொந்தளிக்கின்றார் ஜீவானந்தம்.


இதனைத் தொடர்ந்து மறுபுறம் அப்பத்தாவை டாக்டரிடம் கூட்டி செல்லலாம் என்கிறார் விசாலாட்சி. அதற்கு குணசேகரன், அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என அதட்டுகின்றார். பின்னர் நந்தினி "அப்பத்தாவை ஏன் ரூமுக்குள் போட்டு அடைச்சு வைச்சு இருக்கீங்க" என குணசேகரனிடம் கேட்கின்றார். அதற்கு குணசேகரன், உனக்கு இது தேவை இல்லாத விஷயம். உங்களுக்கு என்னை பத்தி தெரியாது எனப் பதிலளிக்கின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement