• May 29 2023

வலியை கூட எனக்கு செல்லும் வழியாக மாத்த கூடிய ஜீவன்கள்- பிறந்த நாளில் சுந்தரி சீரியல் நடிகைக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்

stella / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகளின் வரவேற்பு அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் மைம் கலைஞராகவும், டிக் டாக் பிரபலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி.. பின்னர் நடிகை நயன்தாரா நடித்த 'ஐரா' படத்தில், நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் கேப்ரியல்லா.

இவருக்கு, அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்றாலும், சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த   கேபி  பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். 


மேலும் இவருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, மீண்டும் வெள்ளித்திரை வாய்ப்புகளை பெற்று தந்தது. அந்த வகையில், கேபிரியல்லா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷாவுடன் இணைந்து நடித்த, N4 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கேபியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று தந்தது.

இந்த நிலையில் இவர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு நண்பர்கள் சர்ப்ரைஸ்ஸாக கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.அந்த வீடியோவை இவர்கள் பதிவிட்டுள்ளனர். இதனால் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement