• Jun 04 2023

சிஎஸ்கேவின் கிரிக்கெட்டைப் பார்க்க குடும்பத்துடன் சென்ற ஜெயம்ரவி- அடடே பசங்க இவ்வளவு கியூட்டாக வளர்ந்திட்டாங்களே....

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் மட்டுமன்றி அழகிலும் மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு இவரிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஆனது இவருக்கு சிறந்த பாராட்டையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்தது. இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக ' சைரன், இறைவன்' என பல படங்கள் இவரின் கை வசம் உள்ளன. 


நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்குத் தற்போது இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் பெயர் ஆரவ். இவர் தனது தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து 'டிக் டிக் டிக்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் ஜெயம் ரவி தனது குடும்பத்துடன் சிஎஸ்கேவின் கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement