• Apr 01 2023

வயதான தோற்றத்திற்கு மாறிய ஜெயம் ரவி.. முடி எல்லாம் இப்படி நரைத்து விட்டதே.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் மனங்களை அழகாலும், நடிப்பாலும் கொள்ளை கொண்ட ஒருவராக ஜெயம் ரவி வலம் வருகின்றார். கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆனது உலகம் முழுவதும் இவரது புகழை கொண்டு சென்று சேர்த்தது.


இப்படத்தின் மூலமாக இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் தற்போது உயர்ந்துள்ளது. அந்தவகையில் சமீபத்தில் அவர் நடித்த ஒரு கடை விளம்பரத்திற்கு மட்டுமே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன், Siren' என அடுத்தடுத்து அவர் நடிப்பில் பல படங்கள் தயாராகி வருகின்றன.


இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு முடி நரைத்து மிகவும் வயதான ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார்.


அதைப்பார்த்த ரசிகர்கள் "அட நம்ம ஜெயம் ரவியா இது, எப்பிடி இளமையாக இருந்தவர் இப்போ இப்படி இருக்கிறாரே" எனக் கேட்டு ஷாக் ஆகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement