• Mar 29 2024

ஜெயம் ரவியின் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ பாட்டுக்கும் விஜய்க்கும் இப்படியொரு தொடர்பிருக்கிறதா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிமான பாடலாசிரியலாக இருப்பவர் தான் யுகபாரதி. இவர் கடந்த 2001ம்ஆண்டு  வெளியான ஆனந்தம் திரைப்படத்தில் இடம் பெற்ற பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்னும் பாடலை எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகினார். 

தொடர்ந்து இவர் எழுதிய காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.


இவ்வாறு தற்பொழுது வரை பல பாடலகளை எழுதி வரும் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது எம. குமரன் படத்தில் இடம் பெற்றுள்ள ஐயோ ஐயோ பாடலுக்கு வரிகள் எழுதும் போது ஐயோ ஐயோ என்று வருகிற இடத்தில் எல்லாம் கண்டேன் கண்டேன் என்று தான் எழுதினேன்.


அதற்கு மியூசிக் டிரெக்டர் இவ்வளவு இலக்கணமாக எல்லாம் தேவையில்லை என்று கூறினார். இதனால் தான் கண்டேன் கண்டேன் என்பதை ஐயோ ஐயோ என மாற்றினேன். இதற்காக எமுதப்பட்ட வரிகளை தான் பின்பு மதுரை திரைப்படத்தில் இடம் பெற்ற கண்டேன் கண்டேன் உயிர்க்காதல் நான் கொண்டேன் என்ற பாட்டுக்கு யூஸ் பண்ணிக்கிட்டோம் என சுவாரஸியமான தகவலைப் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement