• Apr 25 2024

ஜெயம் ரவி-நயன்தாரா பட ஷுட்டிங்கில் ஏற்பட்ட விபத்து… ஒருவர் கவலைக்கிடம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவரே நடிகர் ஜெயம் ரவி. அதுமட்டுமன்றி தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் 'ஜெயம்' படத்தின் மூலம் ஆரம்பமான இவரது திரைப்பயணம் ஆனது பல படங்களைக் கடந்து இன்றும் நீண்டு செல்கின்றது.

இந்தவகையில் ஸ்பைக் திரில்லர் படமான 'ஜன கண மன' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது மீண்டும் இயக்குநர் அகமதுடன் கை கோர்த்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகின்றார். சைக்காலஜிக்கல் திரில்லரான இந்த படமானது மார்ச் மாதம் படப்பிடிப்பிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படம் குறித்து சமீபத்தில் பேசி இருந்த இயக்குநர் அகமது "சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும் ஒரு அழகான காதல் கதை இதில் இருக்கும். காதலும் உணர்ச்சிகளும் எனது வலுவான அடித்தளமாக உணர்கிறேன். நான் இந்த ஸ்கிரிப்ட் எழுத தொடங்கிய போது அதன் ஒரு பகுதியாக அழகான காதல் கதையை எழுதியிருந்தேன். அந்த பாத்திரத்திற்கு நயன்தாரா சரியாக பொருந்துவார் என எண்ணுகிறேன். அவர்களின் கெமிஸ்ட்ரி மூலம் படம் ஹிட் அடிக்கும் என நம்புகிறேன்" என உணர்ச்சிபூர்வமாக கூறியிருந்தார்.

இந்தப் படத்தினுடைய படபிடிப்பானது சென்னை மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பின் போது சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கோரா விபத்து இடம்பெற்றிருக்கின்றது. அதாவது சில நாட்களுக்கு முன்னர் 'ஜெயம் ரவி 29' என்ற இவரது புதிய படத்தில் பணியாற்றி வந்த பெப்சி தொழிலாளர் ஒருவர் கோடாவில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் வைத்தியசாலைக்கு சென்று அவரை பார்ப்பதற்கு பெப்சி சங்கம் உட்பட யாரையும் பட தயாரிப்பு நிறுவனம் அனுமதிக்கவில்லை என்பதால் உண்மை நிலவரம் இதுவரை வெளியாகவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பெப்சி தொழிலாளர்கள் "உண்மையில் தங்கள் உயிரை பணயம் வைத்து உழைக்கும் சினிமா தொழிலாளர்கள் குறித்து யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை" என வருத்தம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement