• Feb 02 2023

ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘இறைவன்’.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Listen News!
Jothika / 2 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக அகிலன், சைரன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 இதோ அந்த போஸ்டர்!



Advertisement

Advertisement

Advertisement