• Apr 25 2024

தந்தையின் சம்மதத்துடன்.. ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணம்... மாப்பிள்ளை இவர் தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த பிரபலமான தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தற்போது தமிழில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 


அத்தோடு தற்போது அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரித்துள்ளார். இப்படமானது பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இவ்வாறாக தந்தை பட தயாரிப்பில் பிசியாக உள்ளதைப் போல், மகள் பாலிவுட் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 


அந்தவகையில் இவர் நடிப்பில் தற்போது 'மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட் கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தை ராஜ்குமார் ராவ் இயக்கி வருகிறார். இப்படத்திற்காக பிரத்யேகமாக தீவிர கிரிக்கெட் பயிற்சி எடுத்து நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

இவ்வாறாக நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் ஜான்வி கபூரின் காதல் பற்றி தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவை தான் ஜான்வி கபூர் தற்போது காதலித்து வருவதாக ஏற்கெனவே கூறப்பட்டது.  


இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அதாவது சமீபத்தில் அனில் கபூரின் பர்த்டே பார்ட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் ஜான்வி கபூர் தனது தந்தை போனி கபூருடன் வந்து கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.


அதுமட்டுமல்லாது இந்த விழாவிற்கு ஜான்வியின் காதலனான ஷிகர் பஹாரியாவும் வந்திருந்தார். அவருடன் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் வெளியானதை அடுத்து, அவர் மகளின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement