• Oct 16 2024

எல்லோர் முன்னாடியும் ஜீவாவை அசிங்கப்படுத்திய ஜனார்த்தனன்- சண்டையை மூட்டி விட்ட பிரசாந்த்- அதிர்ச்சியில் மீனா- Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் வவிறுவிறுப்பு்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜனார்த்தனும் அவரது இரண்டாவது மாப்பிள்ளையுமான பிரசாந்தும் குடித்து விட்டு வந்த மூர்த்தியிடம் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது மூர்த்தியையும் குடிக்க அழைக்கின்றனர். ஆனால் மூர்த்தி வரவில்லை என்று சொல்லி விடுகின்றார். தொடர்ந்து இவர்கள் பேசிட்டு இருக்கும் போது தனம் கதிரை அழைத்து ஜீவாவை இந்த வீட்டிலையே தங்க வைக்கிறது பற்றி பேசுகின்றார்.


அப்போது கதிர் பெரியண்ணன் இருக்க சொன்னால் மட்டும் தான் அண்ணன் இங்க இருக்கும் என்று சொல்ல, தனம் என்ன செய்வது என்று யோசிக்கின்றார். தொடர்ந்து ஜனார்த்தன் தான் ஆரம்பித்துள்ள புது பிஸ்னஸ் பற்றி சொல்ல, மூர்த்தியும் அவரது மச்சானும் நிங்க ஏமாறப்போறீங்க,யாரையும் நம்பி நாம எப்பிடி பணத்தை கொடுக்கிறது என்று சொல்கின்றனர்.

அப்போது ஜீவா இதைத் தான் நானும் சொன்னேன். இவங்க தான் கேட்க மாட்டேன் என்று இருக்கிறாங்க என்று சொல்ல, ஜனார்த்தன் பிரசாந்த் மாப்பிள்ளை படித்தவர்,வெளிநாட்டில எல்லாம் வேலை பார்த்திருக்கிறேர்.நீங்க இங்கையே இருக்கிறீங்க மாப்பிள்ளைக்கு தெரியாததா உங்களுக்கு தெரியப்போகுது என்று கிண்டலாகப் பேசுகின்றார்.


பதிலுக்கு பிரசாந்தும் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்து நாட்டாமை பண்ணீட்டு இருக்கிறீங்களா,மாமாட சொத்து எல்லாத்தையும் ஆட்டையைப் போடனும் என்று பிளான் பண்ணிட்டு இருக்கிறீங்க அதான் இப்பிடி நான் ஏமாத்திறேன் என்று மாத்திப் பேசிறீங்க என்று சொல்ல ஜீவா என்ன என்றாலும் பண்ணுங்க என்று கிளம்பிப் போகின்றார்.


அப்போது பிரசாந்த் ஜீவாவின் சட்டையைப் பிடித்து சொல்லுறது எல்லாம் சொல்லிட்டு போய்டுவீங்களா மன்னுப்புக் கேளுங்க என்று கத்திறார். அப்போது ஜீவா கையை எடு பிரசந்த் என்று சொல்லவும் பிரசாந்த் மன்னிப்புக் கேட்கச் சொல்லி சொல்கின்றார். இதைப் பார்த்த கஸ்துாரி எல்லோரையும் கூப்பிட எல்லோரும் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.மூர்த்தி கடும் கோபத்தில் இருக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement