• Apr 20 2024

காசுக்காக பிக்பாஸில் லிப் லாக் செய்த ஜனனி-நெட்டிசன்களிடம் மாட்டிக்கிட்டது இப்படித்தானா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகைகள் பலரும் தற்போது எதற்கும் துணிந்து நடித்து வருகிறார்கள்.அதாவது மார்க்கெட் இருக்கும் வரை பணத்தை சம்மாதித்துவிட்டு  மார்க்கெட் குறைந்தவுடன் சின்னத்திரை, விளம்பரங்கள், சமூக வலைத்தளங்களில் இன்ப்ளூயன்சர்கள் என சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். மேலும்  இதில் ஒரு சில நடிகைகள் கொஞ்சம் கூட யோசிக்காமல் பணம் வந்தால் போதும் என எப்படிப்பட்ட விளம்பரங்கள் என்றாலும் பரவாயில்லை என நடித்து தள்ளிவிடுகிறார்கள்.

மேலும் இதுபோன்ற வேலைகளால் இருந்த மார்க்கெட்டும் போவதுடன் மக்கள் மத்தியில் பெயரும் கெட்டு போய்விடும். எனினும் இப்படி சமீபத்தில் மட்டமான விளம்பரத்தில் நடித்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார் முந்தைய பிக்பாஸ் போட்டியாளர் ஜனனி. இவர் குடும்ப குத்துவிளக்கு போல் இருந்து கொண்டு இவர் செய்த காரியம் நெட்டிசன்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.இதில் தற்போது 6வது சீசன் இடம்பெறுகின்றது.இதில் இதில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர்தான் ஜனனி ஐயர். சமீபத்தில் தன்னுடைய பெயருக்கு பின்னால் ஜாதி இருப்பதை நான் விரும்பவில்லை என்று கூறி ஐயரை நீக்கியிருக்கிறார்.

ஜனனியின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவு தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இவ் வீடுகளை அலங்கரிக்கும் நிறுவனத்திற்காக விளம்பர பதிவை போட்டிருக்கும் ஜனனி, தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் பார் செட்டப் அமைத்து, அங்கு நின்று பார்ட்டி ட்ரெஸ்ஸில் ஆடுகின்றார். அத்தோடு வீட்டில் பார் அமைப்பது தன்னுடைய நீண்ட நாள் கனவு எனவும் பதிவிட்டிருக்கிறார்.

எனினும் தற்போது இந்த பதிவுக்கு பலரும் நெகடிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். காசுக்காக ஜனனி இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார் எனவும், மேலும் குடும்ப குத்துவிளக்கு இருந்து கொண்டு வீட்டில் பார் அமைப்பது நீண்ட நாள் கனவு என கூறுவது ரொம்பவே ஓவராக இருப்பதாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இவ்வாறு இந்த விசயம் தீயாய் பரவ ஜனனியின் பழைய வீடியோக்கள் எல்லாமே நெட்டிசன்கள் போட்டு அவரை கடுமையாக தாக்கி வருகிறார்கள். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது லக்ஸரி பட்ஜெட் டாஸ்குக்காக ஐஸ்வர்யா தத்தாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் அந்த சீசனில் இவரை அனைவரும் விஷ பாட்டில் என்று சொல்லும் அளவுக்கு தந்திரமாக நடந்து கொண்டார் எனவும் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement