• Apr 18 2024

அசல்-நிவாசினியை தொடர்ந்து காதல் சில்மிசத்தில் ஜனனி..? இரவுநேர காணொளி வெளியானதால் அதிர்ச்சி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த நிலையில் தற்போது 6வது சீசன் மிகவும் சுவாரிஷயமாக நகர்ந்து செல்கின்றது.  கடந்த 5 சீசன்களை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  

இதில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஏராளமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை  கவர்ந்து வருகின்றது.  கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமான ஆரம்பவிழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து 22வது நாளை எட்டியுள்ளது.

அடுத்தடுத்த வாரங்களில் சாந்தி, அசல் கோலார் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர் .  கடந்த வார இறுதியில், கமல்ஹாசன், போட்டியாளர்களுடன் பேசி, நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினார்.

இவ்வளவு நாளும் அசலும் நிவாசினியும் பழகியவிதத்தில் அவர்கள் இருவரும் காதலர்கள் என்று பேசிவந்த நிலையில் அவர்களின் காதல் வாழ்க்கைக்கு ரசிகர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

இவ்வாறு இருக்கையில் இலங்கையில் இருந்து வந்த ஜனனி பெரும்பாலான போட்டியாளர்களோடு பழகாமல் சில பேரோடு மட்டுமே கதைத்து வருகின்றார். தற்போது  பிக்பாஸ் வீட்டுக்குள் ஜனனியோடு ராம் பேசிய வீடியோ வெளிவந்துள்ளது. அதாவது ஜனனி இருந்து கொண்டு இருக்கையில் அவரின் கன்னத்தை பிடிக்க ராம் படாத பாடு படுகின்ற   இந்த வீடியோவை ரசிகர்கள் பார்த்து விட்டு ஜனனிக்கும் காதல் பத்திக்கிச்சு போல எனக் கூறி வருகிறார்கள்.அத்தோடு அசல்-நிவாசினியை தொடர்ந்து  ஜனனிக்கும் ராமிற்கும் காதலா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement

Advertisement