அந்தரங்க போட்டோக்கள் வெளியான விவகாரம்.. பிரபல நடிகரின் படத்தில் இருந்து ஜாக்குலின் நீக்கம்!

143

இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர் என்று தான் கூற வேண்டும்.

எனினும் சமீபத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 200 கோடி ருபாய் பணமோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அதை செய்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தான் ஜாக்குலினின் காதலர் என கூறப்பட்டது. ஆனால் ஜாக்குலின் அதை மறுத்தார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இருவரும் நெருக்கமாக இருக்கும் பல போட்டோக்கள் வெளியாயின. அத்தோடு சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு விலைமிக்க பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நடிகை ஜாக்குலின் அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வருகிறார்.

மேலும் இந்த விவகாரம் அவரது சினிமா வாழ்க்கையிலும் எதிரொலித்துள்ளது. நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், நாகார்ஜுனா அக்கினேனியின் அப்கம்மிங் படமான தி கோஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களால் நீக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அதேநேரத்தில் பண மோசடி விவகாரத்தில் ஜாக்குலின் சிக்கியதால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இந்தப் படத்தில் காஜல் அகர்வால்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மேலும் அவர் படத்தில் இருந்து விலகியதால், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரும் இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அடுத்த யார் இந்தப் படத்தில் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: