• Mar 29 2024

'கமல் மீது பைத்தியமாகி விட்டேன்' ; 'வாயை பிளந்து ரசித்தேன்'.. நடிகை டிஸ்கோ சாந்தி என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் ஐட்டம் பாடல்களில் மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி.80களில் இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறுமளவிற்கு முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடனமாடியுள்ளார்.

நடிகை டிஸ்கோ சாந்தி ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். 80களில் இவர் அதிகமான படங்களில் ஐட்டம் டான்ஸ்களில் தோன்றி அனைவரையும் கவர்ந்தவர். இந்தியிலும் இவர் முன்னணி நடிகர்களுடன் ஆட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 1996ம் ஆண்டில் பிரபல தெலுங்குப்பட நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன டிஸ்கோ சாந்தி, தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை, கணவர், குழந்தைகள் என தன்னுடைய வாழ்க்கையின் பாதையை மாற்றிக் கொண்டார். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் ஸ்ரீஹரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்த நிலையில், தற்போது தன்னுடைய மகன்களுடன் டிஸ்கோ சாந்தி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சமீபத்தில் யூடியூபில் குட்டி பத்மினிக்கு அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய கணவர் மீது தான் மிகவும் பாசத்துடன் இருந்ததாகவும் அவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆனபோதிலும் அவரது நினைவுகளில் இருந்து தன்னால் மீண்டு வெளியில் வரமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய கணவர் இல்லை என்பதை தன்னால் இதுவரை ஏற்க முடியவில்லை என்றும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை பார்த்து தான் துடித்து போனதாகவும் கூறியுள்ளார்.

 நடிகர் கமல்ஹாசன் குறித்த நினைவுகளையும் அவர் பகிர்ந்துக் கொண்டார். மேலும் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு தினமும் அந்தப் படத்தை பார்க்கும் அளவிற்கு தன்னுடைய குடும்பத்தில் தான் உட்பட அனைவரும் பைத்தியமாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். தான் தினமும் இரண்டு முறை அந்தப் படத்தை தனியாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 70 வயதான நிலையில் கமலை வாயை பிளந்துக் கொண்டு பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய டிஸ்கோ சாந்தி, எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு, அந்த கேரக்டராகவே அவர் மாறி விடுவதாகவும் பாராட்டு தெரிவித்தார். தசாவதாரம் படத்தில் நாயுடு கேரக்டர், தெனாலி படத்தின் ஹீரோ கேரக்டர் என அடுத்தடுத்த கேரக்டர்களை சுட்டிக் காட்டிய அவர், இந்த கேரக்டர்களில் அற்புதமாக கமல் டயலாக் பேசியிருப்பார் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement