• Apr 01 2023

பிறந்த நாளில் தன் வாழ்க்கையில் முக்கியமானவரை அறிமுகப்படுத்தி வைத்த இவானா?- ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை இவானா இயக்குநர் பாலாவின் நாச்சியார் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இவானா மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.லவ் டுடே திரைப்படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது.


5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.தொடர்ந்து நடிகர் ஹரிஸ் கல்யாணுடனும் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவர் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.இவரக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இவனா முதல் முறையாக தன்னுடன் கூட பிறந்த சகோதரனின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் பலரும் இவானா இரட்டை குழந்தையாக பிறந்தவாரா எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement

Advertisement