நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெறப் போவது உண்மை தான்-உறுதிப்படுத்திய சமந்தாவின் மாமனார்

41568

தமிழ் சினிமாவில் தன்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல முன்னணி நடிகரகளின் திரைப்படங்களில் நடித்து வந்தவர் என்பதோடு தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

மேலும் இவர் நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்தைத் தொடர்ந்தும் தற்பொழுது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சமந்தா சமீபத்தில்அவரது சமூக வலைத்தளங்களில் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை நீக்கியிருந்தார்.

இதனால் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் பிரச்னை, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி அதிகமாகப் பரவி வருகின்றது. இந்த நிலையில் சமந்தாவின் மாமனாான நாகர்ஜுனா ஆகஸ்ட் 29ம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

அத்தோடு நாகர்ஜுனாவுக்கு மகன் நாக சைதன்யா, மருமகள் சமந்தா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார்கள். அதில் நாக சைதன்யா, காஜல் அகர்வால், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் ட்வீட்டுகளுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார் நாகர்ஜுனா. ஆனால் மருமகள் சமந்தாவின் ட்வீட்டுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

இதனால் இதைப் பார்த்தவர்கள் நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து பெறப் போவது உண்மை தான் என்றும் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து நாக சைதன்யா சமந்தாவை பிரிந்து தன் அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.