• Apr 25 2024

கார் வாங்கி விடுற அளவுக்கு இல்லை- ஜெய்பீம் பட மணிகண்டனின் மனதை உருக்கும் பதில்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எழுத்தாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் தான் மணிகண்டன்.இவர் ரோடியோ ஜோக்கியாக தனது சினிமா கெரியரை ஆரம்பித்தார்.தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான், 8 தோட்டாக்கள், காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா ,ஏலே ,நெற்றிக்கண், ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதிலும் அவர் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஜெய்பீம் படத்தில் ராசக்கண்ணு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டையும் பெற்றார்.இப்படத்திற்காக இவருக்கு நிறைய விருதுகளும் கிடைத்தன.


அப்படி இவர் அண்மையில் பிரபல விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ரஜினிகாந்த் மாதிரி பேசிக் காட்டினார். தொடர்ந்து தொகுப்பாளினி ப்ரியங்கா இவரிடம் எப்போது கார் வாங்குவீங்க என்று கேட்டிருந்தார்.


அதற்கு பதிலளித்த அவர் கார் வாங்கக் கூடாது என்று இல்லை. ஆனால் கார் வாங்கி விடுற அளவுக்கு வீட்டில இடம் இல்லை. முதலில் சொந்தமா வீடு வாங்கனும். அதுக்கப்பிறம் தான் கார் வாங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement