• Apr 18 2024

இதில யாருடைய தவறும் இல்லை அந்த சீன்ல அது வரும் அவ்வளவு தான்- ரஞ்சிதமே பாடல் குறித்து கூறிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான்'வாரிசு'.தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.சமீபத்தில் இப்படத்திலிருந்து "ரஞ்சிதமே" என்னும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியது.இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். 


ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ள இப்பாடல் வெளியாகி இதுவரை 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் பல்வேறு விஷயங்களை அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார்.

இது குறித்து அவர் பேசும் போது "நான் இந்த திரைப்படத்தில் வசனகர்த்தாகவும் பணிபுரிகிறேன். நீண்ட நாட்களாகவே ஒரு கிராமிய பாடலை எழுத வேண்டும், மண் சார்ந்த ஒரு பாடல் எழுத வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த படத்தில் அதற்கான சூழல் அமைந்தது.இசையமைப்பாளர் தமனிடம் இது பற்றி கூறினேன். உடனே அவர் குஷி ஆகிவிட்டார்.  பண்ணலாமே நல்லாருக்கும் என்றார். அதற்காக நான் கிராமியம் சார்ந்த வரிகளை எழுதி கொண்டு சென்றேன். இந்த பாடலை பண்ணும் பொழுதே இது தொடர்பான பல கிராமிய பாடல்களை நாங்கள் கவனித்தோம். கிராமிய பாடல்கள் என்றாலே பொதுவான சில மெட்டுக்கள் இருந்தன. மொச்ச கொட்ட பல்லழகி பாடல், தஞ்சாவூர் மண்ணெடுத்து தாலி ஒன்னு செய்ய சொன்னேன், மக்க கலங்குதப்பா, இன்னும் பிரில்லியண்டாக பயன்படுத்திய ஒரு பாடல் என்றால் என்னம்மா பண்ணலாம் டிஸ்கோவுக்கு போகலாம்.. என்ன பல பாடல்கள் இருந்தன.

உண்மையில் இந்த கிராமிய மெட்டின் தொடக்கம் எதுவென்று நம்மால் ட்ராக் செய்ய முடியவில்லை. இது தொடர்ச்சியாக கிராமிய மரபில் தொடரக்கூடிய ஒரு பாடல் மெட்டு.‌ ஆனால் மொச்ச கொட்ட பல்லழகி பாடல் அனைவருக்கும் தெரிந்த ஒரு கிராமிய மெட்டாக இருந்தது.‌ அந்த பாடலை திரைப்படத்தில் பாடுவதாக ஒரு காட்சி வரும். அதன் தொடர்ச்சியாகவே இந்த பாடல் ஒலிக்கும்.


ஆக இந்த பாடலுக்கு படத்திலேயே கிரெடிட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ரஞ்சிதமே பாடலின் தொடக்க வரிகள் வேற மெட்டில் இந்தப் பாடல் மொச்ச கொட்ட பாடல் அல்ல என்பதற்காகவே பாடல் முழுவதும் வேற மெட்டில் கம்போஸ் செய்யப்பட்டு அந்த ஓரிடத்தில் மட்டும் மொச்சை கொட்டை பாடலின் ட்ரிபியூட்டாக அந்த மெட்டு இடம் பெற்றுள்ளது.

இதில் யாருடைய தவறும் இல்லை. குறிப்பிட்ட அந்த பாடலை படத்திலேயே பாடிவிட்டுதான் இந்த பாடல் காட்சிக்கு திரைக்கதை நகரும். அது எடிட்டிங்கில் போகாது என நம்புகிறேன். அது எடிட்டிங்கில் போனாலும் அந்த காட்சியை முடித்த முறையில் எங்களால் வெளியிட முடியும்."என பாடலாசிரியர் விவேக் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement