• Apr 19 2024

வாரிசா வருவதை விட தனியா துணிவா வந்து ஜெயிக்கிறதுதான் பெரிய விஷயம் - அஜித் பட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் தான் அஜித். இவர் அண்மையில் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் அஜித்குமார் என்று அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனையே அவரது ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.

மேலும் இவர் எச். வினோததுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து துணிவு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தினை போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார். கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார்.


இப்படத்திற்கு  எந்தவித  முன்னறிவிப்பு இன்றி, அஜித்61 பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் துணிவு என்ற தலைப்பில்  ரிலீசாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.அஜித்தின் துணிவு பட ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டருக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில்,  துணிவு பட போஸ்டரை மதுரையில் ஒட்டிய அஜித் ரசிகர்கள், அதில், வாரிசா வந்து ஜெயிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்ல. தனியா துணிவா வந்து ஜெயிக்கிறதுதான் பெரிய விஷயம் என்றும் வரும் 2023 ஆம் வருடம் படம் ரிலிஸாகும் என்றும் பதிவிட்டு, அதற்கு கீழ், ஆசை நாயகன் அஜித் நற்பணி இயக்கம் திருப்பரங்குன்றம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனை விமர்சகர் புளு சட்டை மாறனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement