• Oct 16 2024

கொஞ்சம் பழசு தான் ஆனாலும் இப்ப தான் சூடு பிடிக்குது- கயல் கழுத்தில் தாலி கட்டிய எழில்- எதிர்பாராத டுவிஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை கடந்த 2 ஆண்டுகளாக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

கயல் சீரியலில் நடுத்தர குடும்பத்தில் பொறுப்பில்லாமல் குடிக்காரனாக இருந்த அண்ணன், அவருடைய குடும்பம், கணவரை இழந்த தாய், இரு தங்கைகள், தம்பி என பெரிய குடும்பத்தில் கயல் மட்டும் செவிலியராக பணிபுரிந்து சம்பாதிக்கும் சம்பாத்தியம்தான் அந்த வீட்டில் இருப்போரின் வாழ்வாதாரமாக இருக்கின்றது.


இந்த நிலையில் சீரியலின் கதைப்படி கயல் தன்னுடைய நண்பரான எழிலுக்கு தன்னுடைய தங்கையான ஆர்த்தி கூட திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.இதனால் பல தடைகள் வந்தும் திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று போராடி வருகின்றார்.

இப்போது திருமண சடங்குகள் தொடங்கி நடக்கிறது. தாலியை `எல்லோரும் ஆசிர்வதித்து கொடுக்க அதை மாப்பிள்ளை எழில் கையில் கொடுக்க முதலில் என்ன செய்வது என்று எழில் யோசிக்கின்றார். இதுகுறித்த ப்ரோமோ கூட வெளியாகியிருந்தது.


இந்நிலையில் தற்போது ஒரு போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பெண் கழுத்தில் கட்டாமல் பின்னால் இருக்கும் கயல் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார் எழில். ஆனால் இது உண்மை தானா அல்லது யாருடைய கனவா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement