• Apr 19 2024

இது நம்ப லிஸ்டுலையே இல்லையே- திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகர் சிம்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படத்தை தொடர்ந்து பத்து தல எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் கௌதம் கார்த்திக்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில், நடிகர் சிம்பு இனி வரும் திரைப்படங்களில் நடிக்க ரூ.35 கோடி சம்பளமாக கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அடுத்தடுத்த எந்த ஒரு படத்திலும் சிம்பு கமிட்டாகவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.


இது ஒரு புறம் இருக்க 'மன்மதன்' திரைப்படம் வெளியாகி18 வருடங்கள் ஆகும் நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement