• Apr 25 2024

இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பழைய விக்ரம் பட வில்லன்- இவங்கள ஒரே படத்தில் பார்த்து எத்தனை நாளாச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளுக்கு முதல் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளதால் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இப்படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்தியன் 2 பாதியிலே நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படவெற்றிவிழாவில் உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கும் என்பதை உறுதியளித்தார்.

இதனால் இப்படத்தின் வேலை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே சமீபத்தில் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவின.

ஆனால் தற்போது அது உறுதியான தகவல் இல்லையாம்இ ஆனால் இந்தியன் 2-வில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சத்யராஜ் இதற்கு முன் வில்லனாக கமலுடன் விக்ரம், காக்கிசட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement