• Feb 02 2023

"பெஸ்ட் சொல்லுறத விட்டுட்டு ஒரு ஆள பத்தி போட்டு கொடுக்கிறதே தப்பு- மைனா நந்தினியால் அமுதவாணனுக்கு ஏற்பட்ட அவமானம்

Listen News!
stella / 4 weeks ago
image

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதியில், அதிக Tiles கொண்டு தடம் பதிக்கும் நபர், நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்


இதில் Ticket To Finale சுற்றில் இரண்டாவது டாஸ்க்காக, Debate டாஸ்க் அரங்கேறி இருந்தது. இதில் இரண்டு போட்டியாளர்கள் மாறி மாறி விவாதம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் முன்னே இருக்கும் பல்புகளில் அதிகம் யாருக்கு எரிகிறதோ அவரே வெற்றியாளர் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார்.

இதில் பல போட்டியாளர்கள் இடையே நடந்த விவாதங்கள் பெரிய அளவில் விறுவிறுப்பை எகிற வைத்திருந்தது. அப்படி ஒரு சூழலில், அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோரிடையே நடந்த விவாதம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைனா நந்தினி மற்றும் அமுதவாணன் ஆகியோர்களுக்கு இடையே நடந்த விவாதத்தின் போது, ஒரு டாஸ்க்கில் தனக்கு வாய்ப்பு தராமல் போனது பற்றி கேள்வி ஒன்றை மைனா நந்தினி முன் வைத்து முறையிடுகிறார். இதற்கு பதில் சொல்லும் அமுதவாணன், கதிரவன், ஏடிகே, விக்ரமன் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு கொடுத்ததாகவும் அதில் விக்ரமன் கூட ஒரு சில டாஸ்க்கில் சிறப்பாக நடித்திருந்தார் என்றும் பதில் தெரிவிக்கிறார்.


அதில் விக்ரமனுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு பின்னால் அமுதவாணன் என்ன பேசினார் என்பதை நினைவுகூர்ந்த மைனா, ராபர்ட் மாஸ்டர் வாய்ப்பை தானாக முன் வந்து விக்ரமன் வாங்கிக் கொண்டதை அமுதவாணன் விமர்சித்தது பற்றியும் பேசுகிறார். இதற்கடுத்து பேசும் அமுதவாணன், "பெஸ்ட் சொல்லுறத விட்டுட்டு ஒரு ஆள பத்தி போட்டு கொடுக்கிறதே தப்பு" என தெரிவிக்கிறார். இதனை கேட்டதுமே விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்டோர் சிரிக்கவும் செய்கின்றனர்.


விக்ரமன் பற்றி பின்னால் அமுதவாணன் பேசியதை மைனா போட்டு உடைக்க, பதிலுக்கு அவரும் போட்டு கொடுக்காதீங்க என கூறிய விஷயங்கள், அதிகம் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement