• Apr 19 2024

புதுப் பொண்டாட்டி தானே அதுதான் அப்பிடி... உதயநிதியை வைச்சு செய்த ஸ்டாலின்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவின் முன்னணி நடிகராகவும், தலை சிறந்த அரசியல் வாதியாகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி. இவரிற்கும் இவரது தந்தையான முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் சமீபத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


அதாவது இது தொடர்பாக அவர் கூறுகையில் இப்போது திரையரங்குகளில் என்ன படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அப்பா என்னிடம் கேட்டார். 'லவ் டுடே' என்ற படம் தான் அப்பா நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறினேன்.

அதை நீதான் வெளியிட்டாயா என்று கேட்க, ஆம் அப்பா நான் தான் என்றேன். வேறு என்ன படங்கள் ஓடுகிறது என்று கேட்டபோது அதற்கு காஃபி வித் காதல் என்றேன். அதையும் நீ தான் விநியோகம் செய்கிறாயா என்று கேட்க அதற்கும் நான் ஆம் என்றேன். உடனே,"நீ எந்தப் படத்ததான் விட்டு வச்ச" என்று என்னிடம் அப்பா நகைச்சுவையாக கூறி இருந்தார்.


பிறகு லவ் டுடே திரைப்படம் பார்க்க எல்லாரும் போவம் என்று அப்பா ஏற்பாடு செய்யச் சொன்னார். படம் இந்தக் காலத்து காதலர்களுக்கு ஏற்றார் போல கதைக்களம் கொண்டு இருந்தாலும் எனக்கு அந்தப் படம் கனெக்ட் ஆனது.

ஆனால் சமூக வலைதளங்கள் பற்றி நிறைய இருப்பதினால் அப்பாவிற்கு எப்படி லவ் தொடர்பான அந்தப் படம் பிடிக்கும் என்ற சந்தேகத்துடன்தான் அப்பாவையும் அம்மாவையும் படம் பார்க்க நான் அழைத்துச் சென்றேன். ஆனால் படம் அவர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது" எனக் கூறியிருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து மற்றுமோர் சுவாரஸ்யமான தகவலையும்  பகிர்ந்திருக்கின்றார். அதாவது "நான் எம்.எல்.ஏவாக ஜெயித்த பின்னர் சில நாட்கள் என் தொகுதியில்தான் நானும் இணைந்து முழு நேரமும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மற்ற அமைச்சர்கள் அப்பாவிடம் ஃபோன் செய்து, தம்பி என்னங்க இப்படி பண்றாரு. அப்புறம் எங்க தொகுதியிலும் கேப்பாங்க" என்று நக்கலாக கூறியிருந்தார்கள். 

அதற்கு உடனே எனது அப்பா "புது பொண்டாட்டில்ல... அப்படித்தான் இருப்பாரு" என்று பதிலுக்கு கூறி கிண்டல் அடித்தார்" எனவும் கூறியிருந்தார் உதயநிதி. அதாவது, அரசியலுக்கு வந்து ஜெயித்து முதன்முறையாக நான் மிகவும் ஆர்வமாக வேலை பார்த்ததால் என்னை அப்பா அப்படி கிண்டலடித்தார் என்று உதயநிதி அந்தப் பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement