• Jun 04 2023

என்னோட கெரியரை ஆரம்பிச்சதே இந்த ஷோவில் தான்- குட்நைட் பட நடிகர் மணிகண்டன் விஜய் டிவியின் பிரபல ஷோவில் நடிச்சிருக்காரா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

ஜெய்பீம் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் குட் நைட். இப்படத்தை விநாயக் சந்திரசேகரன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி உள்ளார். இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக முதல் நீ முடிவும் நீ படத்தின் நாயகி மீதா ரகுநாத் நடித்துள்ளார்.

 இப்படத்தின் ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இதில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.


 இதன் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருந்த நிலையில் தற்பொழுது அந்தப் படமும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றது.இப்படம் வெளியாவதற்கு முன்னர் படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

எனவே அண்மையில் கலக்கப் போவது யாரு சம்பியன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட மணிகண்டன். நான் என்னுடைய கெரியரை கலக்கப் போவது யாரு மேடையில் தான் ஸ்ராட் பண்ணினேன். எனக்குள்ள இருக்கிற மிமிக்கிரி திறமையை இங்க தான் வெளிப்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement