• Apr 16 2024

“கொஞ்சம் கஷ்டமா இருந்தது".. நடிகை சமந்தாவின் வைரல் பதிவு!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் சமந்தா.இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். எனினும் சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

சமந்தா, தெலுங்கில் ஷகுந்தலம், யசோதா, குஷி போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். அத்தோடு நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

எனினும் தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.அத்தோடு இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.

Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார்.  வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.மேலும் இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அத்தோடு பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.

மேலும் இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா, தனது நாயினுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டு, "சகுந்தலம் படப்பிடிப்பில் கடினமான பகுதி எதுவென்றால் நடக்கும்போதும், பேசும்போதும், ஓடும்போதும்...அழுகையிலும் கூட அழகையும் தோரணையையும் பேணுவதுதான்! தோரணை என்பது என்னுடைய விஷயம் அல்ல 😂 அதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது!

அங்கே சாஷாவை (வளர்ப்பு நாய்) அழைத்துச் சென்றிருக்க வேண்டும்... இது அவளது விஷயம் அல்லவே!" என சமந்தா பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement