• Apr 24 2024

சும்மா சொல்லக் கூடாது மனுஷன் சூப்பராகத் தான் எழுதி இருக்காரு- பிக்பாஸ் அசீமின் எழுத்தைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதவிர ஜிபி முத்து இரண்டாவது வார இறுதியில் சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.இந்த வாரத் தலைவராக மைனா நந்தினி தேர்வாகியுள்ளார்.


மேலும் இந்த வாரம் வித்தியாசமாக நீதிமன்றம் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் இந்த வாரமும் போட்டியாளர்களுக்கிடையில் மோதல் ஏற்படும் என்று நம்பப்படுகின்றது.


இந்த நீதி மன்ற டாஸ்கிற்காக அசீம் எழுதி வைத்த குறிப்பு குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அசீம் சூப்பராக எழுதக் கூடியவரா என்று கேட்பதோடு அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement