• Sep 13 2024

தனித் தீவில் இந்த இரண்டு இயக்குநர்களுடன் தான் இருக்க வேண்டும்- ஓபனாகப் பேசிய ரஜினியின் இரண்டாவது மகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினியின் மகள் என்ற பெருமையை பெற்றிருப்பவர் சௌந்தர்யா. அப்பாவின் பிரபலம் இருந்தாலும் தனக்கு என்று தனி அடையாளம் பெற வேண்டும் என இவரும் சினிமாவில் நிறைய விஷயங்கள் செய்துள்ளார்.

கிராபிக்ஸ் துறையில் இவர் நிறைய சாதனைகள் செய்திருக்கிறார். தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி இயக்குநராக மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.


இது தவிர பாபா, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் Graphic designer ஆகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனி தீவில் மாட்டிக்கொண்டால், யாருடன் இருக்க ஆசைபடுவீர்கள் என கேள்வி கேட்டப்பட்டது.


இதற்கு பதிலளித்த சௌதர்யா 'ஷங்கர் மற்றும் ராஜமௌலியுடன் இருக்க ஆசை. அவர்களிடம் நிறைய விஷயம் பேசவேண்டும்.' என கூறியுள்ளார்.மேலும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு கடந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement