• Mar 29 2024

வீட்டில் பார்த்தால் செருப்படி தான் விழும் இருந்தாலும் பரவாயில்லை- கதிரவன் மீது காதல் வயப்பட்ட குயின்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதன்முறையாக ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டது. அதில் 6 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 பெண் போட்டியாளர் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கி உள்ளனர்.அதிலும் இந்த வாரம் மணிகண்டன் அல்லது ராம் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் நீதிமன்றம் என்னும் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதில் போட்டியாளர்கள் தமக்கு தவறு என்று நடந்த விடயங்களை சுட்டிக்காட்டி வழக்காடி வருகின்றனர். பெரும்பாலும் இந்த டாஸ்க் இன்றைய தினம் முடிவடையலாம் என்று நம்பப்படுகின்றது.


மேலம் நேற்றைய தினத்திலிருந்து ஷிவினைக் கடுப்பேற்றுவதாக கூறி கதிரவன் மாதிரி ஒரே நிற உடையில் வலம் வருகின்றார்.அதே போல கதிரவனுடன் செல்லச் சண்டைகளும் போட்டு வருகின்றார். இந்த நிலையில் பாத்ரூமில் மேக்கப் பண்ணிக் கொண்டிருக்கும் ஷிவினிடம் சென்று கதிரவன் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ஷிவின் வீட்டுக்காரங்க வருகின்ற டாஸ்க் நடக்க முதல் பிக்பாஸ் வீட்டை விட்டு போய்டனும் வீட்டில இருக்கிறவங்க பார்த்தா செருப்படி தான் விழும்.நாம சும்மா பண்ணிட்டு இருக்கிறோம். வீட்டில பார்த்தால் என்ன நடக்குமோ தெரில என்று சொல்லி சிரிக்கின்றார்.

இதனை அடுத்து ஷிவின் கவலைப்படாத உங்க அம்மா வந்தால் நான் சொல்லி சமாளிக்கின்றேன். சும்மா தான் பண்ணினோம் என்று கூறுகின்றார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement