• Mar 27 2023

வாரிசு படத்தில் காட்டிய விஜய்யின் வீடு ஒரிஜினல் வீடு இல்லையா?- அடடே இத்தனை கோடி செலவாகியுள்ளதா?

stella / 1 month ago

Advertisement

Listen News!


தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 11 -ம் தேதி வெளியானது வாரிசு திரைப்படம்.இதில் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். குடும்ப சென்டிமன்டை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக இப்படம் பல சாதனைகளை உருவாக்கி வருகிறது.வாரிசு படத்தில் காட்டப்பட்ட பிரமாண்டமான வீட்டை பார்த்து பலரும் வியந்தனர். ஏனென்றால் அந்த அளவிற்கு பெரிதாக இருக்கும்.இந்நிலையில் வாரிசு படத்தில் காண்பித்த வீடு, உண்மையான வீடு இல்லை. அது படக்குழுவினர் போட்ட செட் என்று கூறப்படுகிறது.


தில் ராஜுக்கு சொந்தமான இடத்தில் தான் இந்த செட் போட்டார்களாம். இந்த செட்டுக்கு மட்டும் 8 கோடிக்கும் மேல் தில் ராஜு செலவு செய்தாராம். மேலும் வீட்டு அலங்காரத்துக்கு வாங்கிய பொருட்கள் எல்லாமே புதிது என்றும் இதற்கும் தில் ராஜு பல கோடிகள் செலவு செய்தார் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


மேலும் இதனை அடுத்து விஜய் தளபதி 67 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திலிருந்து அப்டேட்டுக்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement