• Mar 29 2024

இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருப்பது மைனா நந்தினி இல்லையா?- யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்- அசீம் சொன்ன வார்த்தை உண்மையாச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது இந்த மாதத்திற்குள் முடிவடைந்து விடும். இந்த வாரம் நாமினேஷனில் அசீம் எஸ்கேப் ஆகி விட்டார். விக்ரமன், ஷிவின், ஏடிகே, கதிர், மைனா, ரச்சிதா மற்றும் அமுதவாணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பிடித்துள்ளனர். 

இதிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற கருத்துக் கணிப்புகளை பார்க்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த லிஸ்டில் எப்படியும் மைனா நந்தினி அல்லது ஏடிகே இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், செம ட்விஸ்ட்டாக இருவரும் அதிக ரசிகர்களை கவர்ந்து கருத்து கணிப்புகளில் முன்னிலையில் உள்ளனர்.


ஷிவின், ரச்சிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். கடைசி வரை அமைதியாகவே ஆடி ஃபைனல்ஸ்க்கு போய் விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் ரச்சிதா கடந்த வாரம் ரெட் கார்டு வாங்காமல் எஸ்கேப் ஆன நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ளார்.

ஜனனி வெளியேற நீ தான் காரணம் என அமுதவாணன் உடன் அசீம் சண்டை பிடித்த நிலையில், இந்த வாரம் அமுதவாணன் ஓட்டுக்கள் ரொம்பவே அதள பாதாளத்துக்கு சரிந்து இந்த வாரம் எவிக்ட் ஆகும் விளிம்பு நிலையில் இருக்கிறார் அமுதவாணன் என்கிற அதிர்ச்சி ட்விஸ்ட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


கடந்த வாரம் கமல் சார் எபிசோடில் சனிக்கிழமையே முதல் நபராக சேவ் ஆனாரே அமுதவாணன் என்ன ஆச்சு என யோசிப்பதா? அல்லது பிக் பாஸ் டீம் சேவ் ஆர்டரை மாற்றி இந்த சீசனில் கொஞ்சமாச்சும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது என சந்தோஷப்படுவதா? என தெரியவில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement