• Apr 01 2023

இதெல்லாம் ஓவராக இல்லையா..? எனக்கே காண்டாகுது.. 'நீயா நானா' செட்டில் கடுப்பான கோபிநாத்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொண்ட பொதுமக்கள் என இருதரப்பினர் இந்த வார 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாதிடுகின்றனர்.


அதில் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் என்ற அணியில் இருந்து பேசிய ஒரு நபரை நிகழ்ச்சித் தொகுப்பாளரான கோபிநாத் திட்டி இருக்கின்றார். அதாவது "தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. அதுவும் முதல் நாள் ஷோ பார்ப்பதை அவர்களுடைய ரசிகர்கள் கெத்தாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரி முதல் நாள் ஷோ பார்க்கும் போது ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இப்படி செய்வதால் எங்களுக்கு வெறுப்பாகவும் பயமாகவும் இருக்கிறது" என்று எதிர்தரப்பு நபர்கள் தங்களுடைய வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இருதரப்பு கருத்துக்களை உடையவர்களையும் எதிர் எதிரே அமர வைத்து கோபி நாத் விவாதம் செய்து கொண்டு இருந்தார். அப்போது பலரும் தங்களுக்கு பிடித்த வகையில் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். 


அதில் ஒருவர் கூறும்போது "முதல் நாள் ஷோ பார்க்கும் போது இவர்கள் கத்தும் சத்தம் தான் அதிகமாக கேட்கிறது. படம் சுத்தமாக எனக்கு கேட்கவில்லை" என்று கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் இதற்கு எதிர்க்கருத்தாக மற்றொருவர் பேசும்போது "முதல் நாள் படத்துக்கு செல்வது என்பது எனக்கு குழந்தை பிறக்கும் போது வருகிற அனுபவம் போல் இருக்கிறது" என்கிற வகையில் பதிலளிக்கின்றார்.


அப்போது அவரைக் குறிப்பிட்டு பேசிய கோபிநாத் "நீ பேசுவது எனக்கு காண்டாக இருக்கிறது. குழந்தை பிறக்கும் சமயத்துடன் திரைப்படம் வெளியாவதை ஒப்பிட்டு பேசுவதெல்லாம் ஓவராக இல்லையா?" என்று அந்த நபரை வார்த்தையாலேயே திட்டினார். 


இவ்வளவு காலமும் அமைதியாக நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத்தையே இவர் இப்படி கோபப்படுத்தி விட்டார் என்று நெட்டிசன்கள் பலரும் தமது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement