• May 29 2023

லியோ படத்தில் மெயின் வில்லனே விஜய்யின் அப்பாதானா?- வெளியான சூப்பரான சீக்ரெட் - இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து  வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் 40 வயது உடைய ஹீரோ ரோலில் தான் விஜய் நடிக்கிறார். காஷ்மீரில் நடந்த ஷூட்டிங்கில் விஜய்யின் கெட்டப் ஏற்கனவே வெளியாகி வைரலாகி இருந்தது.மேலும் நடிகர் சஞ்சய் தத் காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டிருக்கிறார்.


இந்நிலையில் சஞ்சய் தத் தான் லியோ விஜய்யின் அப்பா ரோலில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இருவருமே கேங்ஸ்டர்கள் எனவும் தகவல் வந்திருக்கிறது.  


வைரலாகி வரும் இந்த தகவல் தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்து இருக்கிறது.மேலும் இப்படத்தில் நடித்த பிக்பாஸ் ஜனினியும் லியோ படத்தில் நடிக்க வைத்தமைக்காக நன்றி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement