• Apr 20 2024

அரசியிலில் இணைகின்றாரா திரிஷா...அவரே சொன்ன உண்மை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரிஷா ராங்கி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள 'ராங்கி' படத்தை எம்.சரவணன் டைரக்டு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது இவர் ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன்' ஆகிய படங்களை இயக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது


இவ்வாறுஇருக்கையில்  பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு அவரின் மார்க்கெட் மீண்டும் அதிகமாகியுள்ளது.


இந்நிலையில் இவர் நடித்து சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த ராங்கி திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.மேலும்  இந்த படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ஏ ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார்.


இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் திரிஷாவிடம் “காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறீர்களா?” எனக் கேட்ட போது, அந்த தகவலில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அரசியலுக்கும் தனக்கும் சுத்தமாக சம்மந்தமே இல்லை என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement