• Apr 19 2024

நடிகர் பொன்னம்பலத்தின் மனைவி இவங்கதான? – வியப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 பிரபலமான கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பின் மூலம் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் பொன்னம்பலம்.இவர் தனது உடல் அமைப்பு மற்றும் கம்பீரமான பேச்சால் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பலத்த வரவேற்பை பெற்றார். 

அந்த காலத்தில் இவர் வில்லனாக நடித்திராத திரைப்படங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு வில்லன் கேரக்டரில் பிரபலமானவர் பொன்னம்பலம்.இவருடன் கூட பிறந்தவர்கள் மொத்தம் ஆறு அக்கா தங்கைகள் இவர்களின் தூண்டுதல் காரணமாகவே இவர் திரைத்துறையில் நுழைந்தார். முதலில் இவர் 1988 -ம் ஆண்டு வெளியான கலியுகம் திரைப்படத்தில் ஜெயில் கைதியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். 


இதில் அவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததால் தொடர்ந்து பல படங்களில்  வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். இவர் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார்.பிக்பாஸ் தொடரில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.


அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் அவர்களை சந்திந்த பொன்னம்பலம் தனது குடும்பம் கூறித்து கூறியிருந்தார். அதில் அவர், தனது அப்பாவிற்கு நான்கு மனைவிகள் என்றும் அதில் நான்காவது மனைவிக்குப் பிறந்த ஏழாவது மகன் நான் என்றும் எனக்கு பின்னர் நான்கு பேர் உள்ளனர் என்றும் கூறியிருந்தார்.


மேலும் சொல்லபோனால் மொத்த கிராமமும் எங்கள் உறவினர்கள் என கூறும் வகையில் எங்கள் குடும்பம் மிகப்பெரியது என கூறியிருந்தார்.இவ்வாறான நிலையில் சமீபத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பொன்னம்பலம். தற்போது இவரின் சிகிச்சைக்கு தற்போது கமல் ஹாசன் உதவி செய்து வருகிறார். இப்படி இருக்கையில் பொன்னம்பலம் அவர்களின் குடும்பத்தை யாரும் பார்த்திராத நிலையில் தற்போது அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement