• Mar 23 2023

ராம்சரணின் RC15 படத்தின் டைட்டில் இது தானா?- வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்

stella / 4 days ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தான் RC15இதில், ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும், அரவிந்த் சாமி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ராம் சரண் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரியாக வரும் ராம்சரண், நடுத்தர வயது முதல் வயதான கேரக்டர் வரை பல விதமான கெட்டப்போட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இன்னும் படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர்.


இந்நிலையில், இத்திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்திற்கு CEO தலைமைத் தேர்தல் அதிகாரி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள இப்படத்திற்கு ஏற்றவாறு ஒரே பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அரசியல், தேர்தல் முறைகேடு, ஊழல் போன்றவற்றை மையக்கருவாக கொண்டு இப்படத்தின் கதை இருப்பதால், CEO என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதால், இந்த பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement