• Apr 16 2024

தளபதி 67 இன் கதை இது தானா?- மலையாள ஹுரோக்களை வில்லனாக எடுக்க திட்டம் போடும் லோகேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய்67. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின், லோகேஷ் – விஜய் இணையவுள்ள படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளதால், சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளதாக லோகேஷ் தெரிவித்தார்.

இந்த நிலையில்,ஏ.ஏல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தலைவா படத்திற்குப் பின் நடிகர் விஜய் மும்பை கேங்ஸ்டர் கதையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதற்காத இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது மும்பை சென்றுள்ளதாகவும், இப்படத்தில் வில்லன் கேரக்டர்களுக்கு பிரித்விராஜ், சஞ்சத் தத் என 6 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படம் பான் இந்திய படமாக ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement