• Apr 01 2023

தலையில் ட்ரோன் மோதிய பாடகர் பென்னி தயாளா இது?- மனைவியுடன் செய்யும் சில்மிஷத்தைப் பாருங்க- வைரலாகும் போட்டோ

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பாபா படத்தில் இடம் பெற்ற  "மாயா மாயா" பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் இடம் பபிடித்தவர் தான் பென்னி தயாள் .தொடர்ந்து ஹரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா பாடல், சிவாஜியில் பல்லேலக்கா, ஜிவி பிரகாஷ் இசையில் பொல்லாதவன் படத்தில் நீயே சொல் உள்ளிட்ட பல பாடல்களை பாடி ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.


இது தவிர பல படங்களிலும் பாடி வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து வருகின்றார்.பென்னி தயாள் சமீபத்தில் விஐடி கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கச்சேரி ஒன்றை நடத்தினார்.


அப்போது எதிர்பாராத விதமாக ட்ரோன் ஆப்பரேட்டர் பென்னி தயாளின் மண்டையிலேயே ட்ரோன் விட்டு விட்டார். கை விரல்களிலும், தலையிலும் லேசாக அடிபட்ட நிலையில், நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார் பென்னி தயாள்.


லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சிக்கு தனது மனைவி கேத்தரின் தங்கத்துடன் சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது ஷேர் செய்துள்ளார் பென்னி தயாள். தலையில் அடிபட்டது சரியாகிடுச்சா சார் என ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.


ஃபேஷனில் அதிகம் ஆர்வம் கொண்ட தனது தோழியான கேத்தரினை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பென்னி தயாள் தற்போது அவருடன் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், இருவரும் அடித்துக் கொண்ட லிப் லாக் புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement