வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதில் சிறந்தவராக காணப்படுவர் தான் நடிகர் விக்ரம்.இவர் சேது என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.
தற்போது விக்ரம் மஹான் படத்திற்கு பின்னர் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த இரண்டு படங்களிலும் அவர் நடித்து முடித்துவிட்டார். அந்த படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்து விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் இன்னும் துவங்கப்படவில்லை.
மேலும் விக்ரம் தற்போது தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கிருந்து அவர் திரும்பி வர இன்னும் சில வாரங்கள் ஆகுமென தெரிகிறது. அதனால் அவர் வந்த பின்னர் ஜூலை மாதத்தில் தான் விக்ரமின் 61வது படம் ஷூட்டிங் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் 61 படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு மட்டுமின்றி குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கின்றது.